2nd செப் 2026
இன்று தொடங்கப்பட்ட அனைத்து சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்களின் கட்டுமானப் பணிகள் டிசம்பர் மாத இறுதிக்குள் நிறைவடையும் என்றும், மேலும் 25 மையங்களின் கட்டுமானப் பணிகள் அக்டோபர் மாதம் தொடங்கும் என்றும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு நெருக்கமான மற்றும் தரமான சுகாதார சேவையை வழங்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டு, நாட்டின் ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பில் ஒரு புதிய திருப்புமுனையாக அமையும் “1000 சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்கள்” திட்டத்தின் கீழ் புதிதாகக் கட்டப்படும் நல்வாழ்வு மையங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (01) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.