12th அக் 2025
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) 78வது பிராந்திய மாநாடு கொழும்பில் 13ம் திகதியில் இருந்து முதல் 15ம் திகதி வரை நடைபெறும்.
WHO இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்,
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்திய சுகாதார நிதியை விரிவுபடுத்துவது மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்புக்கு எதிரான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது குறித்து சுகாதார அமைச்சர்கள் மற்றும் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் விரிவான கலந்துரையாடல்களை நிகழ்த்தி முடிவுகளை எட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிராந்திய மாநாடு முக்கிய சுகாதாரப் பிரச்சினைகள் குறித்த தீர்மானங்களை நிறைவேற்றும் மற்றும் முன்னைய ஆண்டுகளின் தீர்மானங்களின் முன்னேற்றத்தை
மதிப்பாய்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அனைத்து மக்களின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் மற்றும் சுகாதாரம் தொடர்பான நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதையே பிரதான நோக்கங்களாக கொண்டுள்ளது.