7th ஏப் 2025
சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சிசனை டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் அதற்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்த முதற் கட்ட கலந்துரையாடல் சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் சமீபத்தில் நடைபெற்றது.
சுகாதாரத்துறைக்கு டிஜிட்டல் மயமாக்கலை ஒரு முக்கிய முன்னுரிமையாகக் கண்டறிந்து, டிஜிட்டல் மயமாக்கல் தீர்வுகளை செயல்படுத்துவதற்கான ஒருமூலோபாய கட்டமைப்பை நிறுவுதல், டிஜிட்டல்ஊடகங்கள் மூலம் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் சர்வதேச ஆதரவுடன் முக்கிய திட்டங்களை (HIQI, HSEP, PHSEP) செயல்படுத்துவதே இந்தக்கலந்துரையாடலின் நோக்கமாகும். சுகாதாரத்துறையில் டிஜிட்டல் மாற்றத்திற்கான கூட்டுவாய்ப்புகளை ஆராய்வதற்காக, சுகாதாரம் மற்றும் வெகுஜனஊடக அமைச்சகம் மற்றும் டிஜிட்டல்பொருளாதார அமைச்சகத்தின் முக்கிய அதிகாரிகள் இந்த உயர்மட்டக்கூட்டத்தில் இணைந்தனர்.
இங்கு, சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் சுகாதார தகவல்பிரிவு, சுகாதாரத்துறைக்கான தற்போதைய டிஜிட்டல் உருமாற்றத்திட்டம், தற்போதைய முயற்சிகள் மற்றும் எதிர்கால இலக்குகளை முன் வைத்தது, அதே நேரத்தில் டிஜிட்டல் பொருளாதார துணை அமைச்சர் பொறியாளர் எரங்கவீரரத்ன மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருணஸ்ரீதனபால ஆகியோர் தேசிய டிஜிட்டல்மயமாக்கல் உத்தி மற்றும் சுகாதாரத்துறைக்கான அதன்பயன்பாடுகள் குறித்த தகவல்களை வழங்கினர். டிஜிட்டல் மயமாக்கலில் எதிர்கொள்ளும் சவால்கள், தரவுபாதுகாப்பு, திறன்மேம்பாடு மற்றும் பரந்த தேசிய டிஜிட்டல் உத்தியில் டிஜிட்டல் சுகாதார தீர்வுகளை ஒருங்கிணைத்தல் போன்ற முக்கிய தலைப்புகளில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் கொள்கைக்கு இணங்க, சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் முழு வழிகாட்டுதலின் கீழ், சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் இந்த முயற்சியை வழிநடத்தினார். சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சகம், டிஜிட்டல் பொருளாதார அமைச்சகத்துடன் இணைந்து, சுகாதாரசேவைகளை திறம்பட வழங்குவதை மேம்படுத்துவதற்கும், செயல்திறனை அதிகரிப்பதற்கும், அனைத்து குடிமக்களுக்கும் சிறந்த சுகாதார பெறபேறுகளை பெற்றுத்தருவதற்கும். உறுதிசெய்வதற்கும் சுகாதாரத்துறையில் டிஜிட்டல் மாற்றத்தை மேம்படுத்துவதற்கு பாடுபடும் என்று சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்தக்கலந்துரையாடலின் முடிவுகளின் அடிப்படையில் மேலும் கூட்டு முயற்சிகள் மற்றும் செயல்படுத்தல் உத்திகளை உருவாக்க நடவடிக்கைஎடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர், நிபுணர் மருத்துவர் அனில்ஜாசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், டாக்டர் அசேலகுணவர்தன, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியாளர் எரங்க வீரரத்ன, டிஜிட்டல்பொருளாதார அமைச்சின்செயலாளர் வருண ஸ்ரீதனபால, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர்கள், சுகாதார பிரதிபணிப்பாளர்கள், இயக்குநர்கள், தலைமை நிதி அதிகாரிகள் மற்றும் இரு அமைச்சுகளின் பிறமூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.