Featured news thumbnail

11th செப் 2025

இலங்கை தேசிய வைத்தியசாலையின் வளர்ச்சிக்கு ஜப்பானிய அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவு.

நாட்டின் அரசாங்க வைத்தியசாலை அமைப்பின் முதன்மை மருத்துவமனையான இலங்கை தேசிய மருத்துவமனையில், ஜப்பானிய அரசாங்கத்தாலும் ஜப்பானிய மக்களாலும் வெளிநோயாளர் பிரிவு, நோயறிதல் மையம், அவசர சிகிச்சை பிரிவு மற்றும் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு ஆகியவற்றிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டஉபகரணங்களை ஆய்வு செய்வதற்காக, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதர் அதிமேதகு அகியோ இசோமாட்டா (H.E. Akio Isomata) உள்ளிட்ட ஜப்பானிய பிரதிநிதிகளால் சமீபத்தில் விசேட ஆய்வு மேற்கொண்டது.

ஜப்பானிய அரசாங்கத்தாலும் அந்த நாட்டு மக்களாலும் இலங்கை தேசிய மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட உபகரணங்ககளை பயன்படுத்தி வழங்கப்படும் சிகிச்சை சேவைகள் குறித்த சில புரிதலைப் பெறுவதற்கும், ஜப்பானிய அரசாங்கத்தின் ஆதரவின் மூலம் நாட்டின் சுகாதார அமைப்பின் வளர்ச்சிக்கு மேலும் பங்களிப்பு வழங்குவது சம்பந்தமா இந்த விஜயம் அமைந்திருந்தது. நாட்டு மக்களின் சுகாதார நிலையை மேம்படுத்தவும், மக்களுக்கு சிறந்த சிகிச்சை சேவைகளை வழங்கவும், ஜப்பானிய அரசாங்கம் சில மாதங்களுக்கு முன்பு இலங்கை தேசிய மருத்துவமனைக்கு ஒரு M.R.I இயந்திரம், ஒரு C.T. ஸ்கேன் இயந்திரம், ஒரு Cathlab சிகிச்சை பிரிவு, அத்துடன் அறுவை சிகிச்சை உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய உபகரணங்களை வழங்கியது. வழங்கப்பட்ட அனைத்து உபகரணங்களின் மதிப்பு 1000 மில்லியன் ஜப்பானிய யென் ஆகும். நாட்டின் சுகாதாரத் துறையின் எதிர்கால மேம்பாட்டிற்காக நன்கொடைகளை வழங்க இலங்கைக்கான ஜப்பானிய தூதரும் ஜப்பானிய அரசாங்கமும் மேற்கொண்ட முயற்சிகளுக்கு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ ஜப்பானிய தூதர் மற்றும் ஜப்பானிய அரசாங்கத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். தற்போதைய அரசாங்கமும் சுகாதார அமைச்சும் நாட்டின் முதல் தேசிய மருத்துவமனையான இலங்கை மருத்துவமனையின் மேம்பாட்டிற்கு பிரத்தியேகமாக கவனம் செலுத்தி வருவதாகவும், இதற்காக வெளிநாட்டு உதவிகளையும் நாடுவதாகவும் அவர் கூறினார். இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையே நீண்டகால நட்புறவு நிலவுவதாகவும், இதுவரை வழங்கப்பட்ட உதவிகள் நாட்டின் சுகாதாரத் துறையின் எதிர்கால மேம்பாட்டிற்கு தொடரும் என்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதர் திரு. அகியோ இசோமாட்டா தெரிவித்தார். இந்நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் டாக்டர் குமார விக்ரமசிங்க, இலங்கை தேசிய மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பிரதீப் விஜேசிங்க, பிரதிப் பணிப்பாளர்கள் டாக்டர் இந்திக ஜாகோடா, வைத்தியர் பிரதீப் ரத்னசேகர மற்றும் நிர்வாக அதிகாரிகள், நிபுணர்கள், மருத்துவர்கள், தாதி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

மீளவும் செய்திக்கு