Featured news thumbnail

2nd செப் 2025

சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சுகாதார மருத்துசேவையானது நேற்று (30) பாலிந்தவில் உள்ள கெலின்கந்த கொஸ்குலான ஜூனியர் கல்லூரியில் நாள் முழுவதும் தனது முழுமையான சேவையை வழங்கியது.

கண் சம்பந்தமான மருத்துவ பிரிவு, மகளிர் நோயியல் சம்பந்தமான மருத்துவ பிரிவு, பல் சம்பந்தமான மருத்துவ பிரிவு, ஆயுர்வேத மருத்துவ பிரிவு, நீரிழிவு மருத்துவ பிரிவு, இரத்த அழுத்த மருத்துவ பிரிவு, ஈசிஜி மருத்துவ பிரிவு, கொழுப்பு மருத்துவ பிரிவு, கண் மருத்துவ பிரிவு உள்ளிட்ட பல மருத்துவ பிரிவுகள் அங்கு ஒன்றிணைந்து மருத்துவசேவைகளை வழங்கின..

ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த சேவைகளைப் பெற்றனர். தேவைப்படுபவர்களுக்கு இலவச கண் கண்ணாடிகளும் வழங்கப்பட்டன. அனைத்து நோய்களையும் பரிசோதித்த பிறகு, சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு இலவச மருந்துகள் வழங்கப்பட்டன. மேலும், மேலதிக சிகிச்சை தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டனர். களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளருமான நிபுணர் நிஹால் அபேசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், களுத்துறை நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்க ரங்கநாத், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் கிஹான் டி சில்வா மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
இலவச கண் கண்ணாடிகள் விநியோகம் சவி லேண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிதியுதவியுடன் நடைபெற்றது, மேலும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. ஆன்ட்ரி பெரேராவும் விழாவில் பங்கேற்றார். விழாவில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்க ரங்கநாத், மாவட்டத்தின் தொலைதூரப் பகுதியில் அமைந்துள்ள கெலின்கந்த கொஸ்குலான பகுதி மக்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும், அவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதில் மட்டுமே கவனத்தை செலுத்துகிறார்கள் தங்கள் உடல்நலத்தில் சிறப்பு கவனம் செலுத்துவதில்லை என்று கூறினார். தற்போதைய அரசாங்கத்தின் "ஒரு வளமான நாடு, ஒரு அழகான வாழ்க்கை" கொள்கைக்கு இணங்க ஆரோக்கியமான மக்களை உருவாக்க தற்போதைய அரசாங்கம் கடுமையாக உழைத்து வருவதாகவும் அவர் கூறினார். அந்த திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு நடமாடும் சுகாதார மருத்துசேவையானது சம்பந்தபட்ட மக்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும் என்றும், அதை களுத்துறையின் கெலின்கந்த பகுதிக்கு கொண்டு வர முடிந்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறினார். மேலும், இந்த நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் மூத்த உதவிச் செயலாளர் திரு. லக்ஷ்மேந்திர தென்னகோன் மற்றும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் திரு. கிஹான் டி சில்வா ஆகியோரும் உரையாற்றினர்.

மீளவும் செய்திக்கு